Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் இராணுவத்திலிருந்து பல ஆயுதங்களை காணவில்லை!

சுவிட்சர்லாந்தில் இராணுவத்திலிருந்து பல ஆயுதங்களை காணவில்லை!

சுவிட்சர்லாந்து இராணுவத்திலிருந்து பல ஆயுதங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து ஆயுத படைகளிலிருந்து 96 ஆயுதங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் இந்த ஆயுதங்கள் காணாமல் போன சம்பவங்களில் எண்ணிக்கை சராசரி சம அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

96 ஆயுதங்கள் இராணுவப் படையினரால் தொலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன ஆயுதங்களில் 82 ரைபல்களும், 14 கைத்துப்பாக்கிகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளன.

ஆயுதங்கள் காணாமல் போவதனை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது