சட்டவிரோதமான முறையில் இரசாயனங்களை நாட்டுக்குள் கொண்டு வந்த ரொமானியா பிரஜை
சுவிட்சர்லாந்து சுங்கப் பிரிவினர் ஆபத்தான இரசாயனங்களை மீட்டுள்ளனர்.
அண்மைய வாரங்களில் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஆபத்தான இரசாயங்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
உரிய அனுமதி எதுவமின்றி இந்தப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரொமானியா பிரஜை ஒருவர் அண்மையில் 900 கிலோ கிராம் எடையுடைய ஆபத்தான இரசாயனங்களை சுவிட்சர்லாந்திற்குள் கொண்டு வந்துள்ளார்.
குறித்த நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமான முறையில் இரசாயனங்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சில அண்மைய வாரங்களில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.