அன்றாட உணவுகள் மற்றும் பானங்கள் விலைகளை குறைக்கவிருக்கும் MIGROS
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்போருள் அங்காடியான MIGROS அடுத்த வாரம் முதல் நூற்றுக்கணக்கான பொருட்களின் விலைகளை குறைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
சுமார் 450 பொருட்களின் விலையை 20 சதவீதம் வரை குறைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
அவற்றில் இறைச்சி, சீஸ், பாண் மற்றும் தேயிலை வகைகள் உள்ளிட்ட பொதுவான உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் நுகர்வோருக்கு பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.