பேர்ன் நகரில் நத்தார் தினமன்று வரலாறு காணாத வெப்பநிலை

பேர்ன் நகரில் நத்தார் தினமன்று வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பேர்ன் நகரில் கடந்த நத்தார் தினமன்று 13.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
1864ம் ஆண்டு முதல் இதுவரையில் வெப்பநிலை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டிலேயே கூடுதல் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக நத்தார் பண்டிகைக் காலத்தில் காணப்படும் வெப்பநிலையின் அளவினை விடவும் கூடுதலான வெப்பநிலை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.