Tamil Swiss News

சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், தாதியர்கள் பற்றாக்குறை

சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், தாதியர்கள் பற்றாக்குறை

சுவிட்சர்லாந்து சுகாதார கட்டமைப்பில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாநில அரசாங்கங்களுக்கும் சமஷ்டி அரசாங்கத்திற்கும் இடையில் போதியளவு இணக்கப்பாடு அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சூரிச் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பெருந்தொற்று ஏற்பட்ட நாள் முதல் சுவிட்சர்லாந்து சுகாதார சேவையில் ஆளணி வளப்பற்றாக்குறை நிலையை உணர முடிகின்றது.

மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனையதுறைசார் வல்லுனர்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.