Tamil Swiss News

சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான உத்தேச உடன்படிக்கை !

சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான உத்தேச உடன்படிக்கை !
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உத்தேச உடன்படிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இரு தரப்புக்களுக்கும் இடையிலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் இந்த உடன்படிக்கை குறித்த யோசனை முன் வைக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த உடன்படிக்கையில் குறிப்பிடதக்களவு முரண்பாடுகள் காணப்படுவதனால் இதனை ஏற்க முடியாது என சுவிட்சர்லாந்து அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் காணப்படும் சுமார் 120 உடன்படிக்கைகளை ஒன்றிணைத்து பொதுவான ஓர் உடன்படிக்கையாக கொண்டுவரும் நோக்கில் இந்த முன்மொழிவுகள் செய்யப்பட்டிருந்தது.

சம்பளப் பாதுகாப்பு, அரச உதவி நியதிகள் மற்றும் சுவிஸ் சமூக பாதுகாப்பு நலன்களை ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பெற்றுக்கொள்ளச் கூடிய சாத்தியம் ஆகிய பிரதான மூன்று காரணிகளில் உடன்பாடு கிடையாது என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான உடன்படிக்கையில் இணங்குவது பொருத்தமற்றத என சுவிட்சர்லாந்து அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவெளை, சுவிட்சர்லாந்தின் இந்த தீர்மானம் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.