Tamil Swiss News

செவிலியரான காதலிக்கு கொரோனா தொற்று: சுவிஸ் இளைஞரின் முடிவு

செவிலியரான காதலிக்கு கொரோனா தொற்று: சுவிஸ் இளைஞரின் முடிவு

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவரின் காதலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரது பாதுகாப்பு கருதி அந்த இளைஞர் தனியாக வாடகை அறையில் தங்கி வருகிறார்.

குறித்த இளைஞரின் காதலி இன்னொரு மண்டலத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதால், தற்போது அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தமது குடியிருப்பில் தனிமைப்படுத்தலில் உள்ளார். இந்த நிலையில் இருவரின் பாதுகாப்பு கருதி 28 வயதான அந்த இளைஞர் வாடகைக்கு அறை ஒன்றை ஏற்பாடு செய்து 12 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு தம்மை உட்படுத்தியுள்ளார்.

தமது காதலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே குடியிருப்பில் இருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்தலில் ஏற்படுவதும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அந்த இளைஞர்.

இதனையடுத்தே, தனியாக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கவும், அலுவல்களை அங்கிருந்தே மேற்கொள்ளவும் முடிவு செய்ததாக அவர் தெரிவிக்கிறார்.

தமது காதலியை காணாமல் பல நாட்கள் இருப்பது ஒருவகை பரிதவிப்பு தான் என்றாலும், இந்த இக்கட்டான சூழலில் இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பயனளிக்கும் எனவும்,

மிக விரைவில் தமது காதலியை காணவும், அவருடன் ஒரே குடியிருப்பில் தங்கவும் ஆவலாக இருப்பதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரையான சோதனைகளில் தமக்கு நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதால், அடுத்த வாரத்தில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம் எனவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.