Tamil Swiss News

சுவிஸில் அவசரகாலப்பிரகடனம் ஏப்ரல் 26 வரை நீடிக்கப்பட்டது!

சுவிஸில் அவசரகாலப்பிரகடனம் ஏப்ரல் 26 வரை நீடிக்கப்பட்டது!

சுவிசில் 08.04.2020 புதன்கிழமை தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்குவதற்கான ஊடகமாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுவிஸ் கூட்டாட்சியினால் எடுக்கப்பட்ட அவசரகாலப்பிரகடனமும், அதற்கான நடவடிக்கைகளும், விதிமுறைகளும் ஏப்ரல் 26 வரை நீடிக்கப்படுகின்றன. அதன் பின் படிப்படியாக வழமைக்குத்திரும்பும் வகையிலான நடவடிக்கைகள் முடிவெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெரும்பலான மக்கள் சுவிற்சர்லாந்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து, தங்களினதும் பிறரினமும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அடைந்த இலக்கை நினைக்க திருப்பதியாக உள்ளதும் ஆனால் அதை கைவிடக்கூடாது எனவும் கூட்டாட்சி அரசுத்தலைவர் சிமொனெத்தா சொமறூகா மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

“செல்லும் பாதை சரி. ஆனால் இலக்கை இன்னும் அடையிவில்லை!” என்றார் சிமொனெத்தா சொமறூகா.

“தள்ளாடிக்கொண்டிருக்கும் சமநிலையில் நிலைமை உள்ளது. எனவே தொற்றுநோயின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான் வழமைக்கு மாறுவதை முடிவெடுக்க முடியும். அடுத்த வார கூட்டத்தில் படிப்படியாக முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.”என்று சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே கூறியிருந்தார்.

பெரிதாக மனிதர்கள் ஒன்றுகூடும் இடங்களைத்தவிர்த்து, ஏனையவை இடைவெளியையும், சுகாதாரத்தையும் கடைப்பிடித்தால் மீண்டும் விரைவில் திறக்கப்படலாம். எனினும் பாதுகாப்பு முகமூடிகளை அணிவதா, இல்லையா என முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொற்றுநோயின் பெருக்கம் குறைவது தெரிகின்றது. நாளுக்கு நாள் 1000 ஆக தொற்றி வந்தது, தற்பொழுது 600ற்கு கீழாக மாறி வருகின்றது குறிப்பிடத்தக்கது எனவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா
Source: bag.admin.ch