Tamil Swiss News

சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சுவிஸ் தலைநகர் பெர்ன்-ல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சுவிஸ் தலைநகர் பெர்ன்-ல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

சுவிட்சர்லாந்தில் இருபாலருக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தலைநகர் பெர்ன்-ல் 20,000 பேர் திரண்ட ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது பெர்ன் நகரத்தை நேற்று ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

சமத்துவம் பேணப்பட வேண்டும் என 37 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலமைப்பிலும், 22 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், தற்காலத்திலும் ஆண், பெண் இருபாலருக்கும் அதிகாரமும் பணமும் வேறு வேறாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சுவிஸ்ஸில் ஆண்கள் பெறும் ஊதியத்தின் ஐந்தில் ஒரு பகுதியே வருவாயாக ஈட்டுகின்றனர். மட்டுமின்றி அரசியல், தொழில்துறை என எதிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

குறிப்பாக ஊதியமற்ற பணிகளை பெரும்பாலும் மேற்கொள்வது பெண்களே. இதனால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சுமார் 600 பிராங்குகள் வரை இழப்பை சந்திக்கின்றனர்.

இந்த தொகையானது இறுதியில் வரி வரம்புக்குள் செல்லாத பணமாக உருமாறுகின்றது, பெர்ன் நகரத்தில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த நிர்வாகிகள், உடனடியாக சமத்துவம் பேண கோரிக்கை விடுத்தனர்.

சம ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

கடந்த மே மாதம் செனட் உறுப்பினர்கள் கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதில், நிறுவனங்களில் குறைந்தபட்சம் 100 ஊழியர்களையேனும் தெரிவு செய்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்க பரிந்துரை செய்தது.

மட்டுமின்றி குறித்த திட்டத்தை தொடர்ந்து 4 ஆண்டுகள் மேற்கொண்டு, அதை ஆராயாவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


(Image: SRF news)