Tamil Swiss News

ஜெர்மனியில் தேடப்பட்டு வந்த கொலையாளி: பிரான்சில் கைது

ஜெர்மனியில் தேடப்பட்டு வந்த கொலையாளி: பிரான்சில் கைது

ஜெர்மனியில் கொலைக்குற்றம் ஒன்றில் தேடப்பட்டு, ஐரோப்பிய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரான்சின் வடக்கு பிராந்தியம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த புதன்கிழமை Marquette-lez-Lille (Nord) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய குறித்த நபர் மருத்துவ நிலையம் ஒன்றில் காத்திருக்கும் போது காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அல்பேனியா நாட்டு குடியுரிமை கொண்டவர் எனவும், கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியில் கொலை ஒன்றைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து பிரான்சில் தலைமறைவாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.