Tamil Swiss News

ஜேர்மனியில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு

ஜேர்மனியில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு

ஜேர்மனியின் செலே மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரட்டை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நபர் ஒருவர் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தன்னை சுட்டுக்கொண்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் சென்றுள்ளதுடன் விசாரணை  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

என்றாலும் குறித்த இருவருக்கும் இடையில் காணப்பட்ட உறவு தொடர்பில் தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆண் முதலில் உயிரிழந்துள்ளதாகவும்  பெண் கடுமையாக காயமடைந்திருந்ததாகவும் சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவை பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் சம்பவத்தில் 78 வயதுடைய ஆணும் 49 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சம்பவத்தை நேரில் கண்டவர்கள விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

ஜேர்மனியின் வட பகுதியில் சுமார் 70000 மக்கள்தொகையை கொண்ட ஒரு சுதந்திர பிரதேசம் செலே என்பது குறிப்பிடத்தக்கது.