Tamil Swiss News

மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவராது!

மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவராது!

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரலிலேயே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா பிரச்சினை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் மாஸ்டர் வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவராது. வெளியீட்டு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார். தியேட்டடர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத  இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் விஜய் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கலெக்ஷன் வராமல் போகும் என்று தயாரிப்பாளர் தயங்குவதாக தெரிகிறது.

கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதங்களில் 100 வீத இருக்கைக்கு அனுமதி கிடைத்து விடும் என்பதால் அப்போது படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.