Tamil Swiss News

Zermatt நகரில் பனிப்பாறை சரிவு ஏற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Zermatt நகரில் பனிப்பாறை சரிவு ஏற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாடு குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், Zermatt நகரில் பனிப்பாறை சரிவு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ப்ஸ் மலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக திங்களன்று சுவிற்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவு எச்சரிக்கை விடப்பட்டது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் Zermatt பகுதி பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தளங்கள் செயல்படாவிட்டாலும், திடீரென பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணை மீட்பதற்காக Glarus பகுதியில் உள்ள Elm என்னும் இடத்திற்கு ஒரு ஹெலிகாப்டர் மீட்புக்குழு விரைந்தது.


தொடர்ச்சியான மழை காரணமாக ஆங்காங்கே பெருவெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. டாவோஸ் பகுதியில், சுமார் 24 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள் திறந்தே உள்ளன, அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் Zermatt நகரில் பனிப்பாறை சரிவு ஏற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.