Tamil Swiss News

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிந்து வருகிறது!

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிந்து வருகிறது!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிந்து வருகிறது. உலகின் மிக குளிர்ச்சியான கிராமத்தில் கண் இமைகள் கூட உறைந்து விடும் நிலையில் பனிக்கொட்டி வருகிறது.

இந்நிலையில் ஒரேநாளில் சுமார் 2 மீட்டர் அளவு பனிப்பொழிந்ததால் வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதி ஒன்றில் 13,000 சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்களாக பரிதவித்து வந்தனர்.

கடந்த திங்களன்று தொடங்கிய பனிப்பொழிவின் அளவு 24 மணி நேரத்தில் 6 அடி 6 இன்ச் ஆக பதிவாகியுள்ளது, அதாவது 2 மீட்டர் உயரம், எனவே Valais மாகாணத்தின் Simplon region தொடர்புகள் ஏதுமின்றி துண்டிக்கப்பட்டுள்ளது, விடுதியை சுற்றியுள்ள மலைவழி பாதை, ரயில் பாதை, சாலைகள், ரோப் கார் போன்ற அனைத்து தடங்களும் இடர்பாடில் சிக்கி முடங்கியுள்ளது

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மிக அதிக பனிப்பொழிவு இது என்பதும் குறிப்பிடதக்கது.