சுவிஸ்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த 64 வயது மூதாட்டி பலி

சுவிட்சர்லாந்தில் பனிசறுக்கின் போது திசைமாறி சென்ற 64 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். தனது கணவனுடன் சேர்ந்து Uri மாகாணத்தில் Obermpstrasse Sledge பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது ஒரு வளைவில் திரும்புவதற்கு பதிலாக திசைமாறி சென்று கீழே விழுந்தார்.
Matterhorn Gotthard Bahn ரயில் பாதையில் விழுந்ததில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து, ரயில்வே கேட் 90 நிமிடங்கள் மூடப்பட்டது.
வழக்கமான வழியை விடுத்து அவரது கணவர் தனியாக வகுத்து தந்த பனிச்சறுக்கு வழியைத் தொடர்ந்து அப்பெண் வந்ததாக ATS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து மாகாண பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.