சுவிசில் அதிகரித்து வரும் காற்று மாசுக்கு எதிராக வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரம்!

சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், பல சுவிஸ் நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாகவும் ஐரோப்பிய தர நிலைகளைக் காட்டிலும் பசுமை இல்லா வாயுவான நைட்ரஜன் ஆக்சைடு வெளியிடப்படும் அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்தினால் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான VCS, தலைநகரமான Bernஇல் Traffic light system ஒன்றை நிறுவியுள்ளது.
நைட்ரஜன் ஆக்சைடின் அளவு 30 மைக்ரோகிராம்களைத் தாண்டும்போது இதிலுள்ள சிவப்பு விளக்கு எரியத்தொடங்கும். பச்சை விளக்கு எரிந்தால் ஆபத்தில்லை என்று பொருள்.
Bern ரயில் நிலயத்திற்கு வெளியே மிகுதியான போக்குவரத்து நெரிசல் கொண்ட ஒரு பகுதியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த இடத்திற்கு வந்து செல்வதாகவும், பலர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் VCS தெரிவித்துள்ளது.
Bern பகுதியில் மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்து நாட்டின் பல பகுதிகளிலும் அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.