புகலிடம் கோருவோருக்கான தற்காலிக மையத்தில் பொலிசார் மீது கல் விச்சு!

கடந்த வெள்ளியன்று சுவிற்சர்லாந்தின் Kriens பகுதியிலுள்ள புகலிடம் கோருவோருக்கான தற்காலிக மையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பொலிசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த பொருள் உதவி நிறுத்தப்பட்டதால் இந்தக்கலவரம் ஏற்பட்டது. அது மட்டுமன்றி, வெள்ளிக்கிழமை மாலை, 4 பேர் மையத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக நிர்வாகம் முடிவெடுத்ததும் அங்குள்ளவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதன் விளைவாகவே கலவரம் வெடித்தது. கட்டிடங்கள் மீதும், பொலிசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் கட்டிடத்தின் சில பகுதிகளும், மேசை நாற்காலிகளும் சேதமடைந்தன.
பெப்பெர் ஸ்பிரே பயன்படுத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த பொலிசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.