Tamil Swiss News

சுவிஸில் பெருமளவில் துப்பாக்கிகளை வைத்திருந்த 61 வயது முதியவர் கைது

சுவிஸில் பெருமளவில் துப்பாக்கிகளை வைத்திருந்த 61 வயது முதியவர் கைது

சுவிஸில் பெருமளவில் துப்பாக்கிகளை வைத்திருந்த 61 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸில் 61 வயது முதியவர் ஒருவர், சட்டவிரோதமாக ஆயுதங்களை ஆஸ்திரிய நாட்டிற்கு விற்பதாக சந்தேகிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து ஆஸ்திரிய அதிகாரிகளும், சுவிஸ் அதிகாரிகளும் கூட்டாக அவரிடம், கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் St Gallen நகர பொலிசார் கடந்த வாரம் அந்த முதியவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போது, சுமார் 1,00,000க்கும் அதிகமான வெடிமருந்துகள், 280 துப்பாக்கிகள் மற்றும் 1.3 மில்லியன் பிராங்க் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைத்துப்பாக்கிகள், சுழல் துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் ஆகியன அந்த துப்பாக்கிகளில் அடங்கும். மேலும், எறிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருப்பது, ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.