பிரிவிலும் இணைந்தே இருக்க வேண்டும் சுவிஸ் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

பூமியில் இருந்து போது சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர், பிரிவிலும் ஒன்றாக இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச்சை சேர்ந்த வயதான தம்பதியினர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கணவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், ஓய்வூதிய பணத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனம் வருத்தத்தில் இருந்த கணவர், தனது மனைவிக்கு எதாவது நேர்ந்து விட்டால், இருவரும் பிரிந்துவிடுவோம், இறப்பில் கூட நாம் சேர்ந்தே செல்வோம் எனக்கருதி, துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை முதலில் சுட்டுள்ளார்.
அதன்பின்னர், தனைத்தானே சுட்டுக்கொண்டதில், மருத்துவமனையில் வைத்தே இருவரது உயிரிரும் பிரிந்தது.