Swiss Tamil

சுவிஸ் எயர்லைன்ஸ் கணினி கட்டமைப்பில் கோளாறு.

சுவிஸ் எயர்லைன்ஸ் கணினி கட்டமைப்பில் கோளாறு.

சுவிஸ் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை இந்த கோளாறு ஏற்பட்டது.

அது அரை மணிநேரத்தில் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டு, வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கும் அந்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.