Tamil Swiss News

2038 குளிர்கால விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்கை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டம்

2038 குளிர்கால விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்கை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டம்

2038 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடத்துவதற்கு சுவிஸ் பெடரல் கவுன்சில் ஆதரவு வழங்கியுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் நேற்று முன்வைத்த திட்டங்களுக்கு ஆதரவு வழங்கிய பெடரல் கவுன்சில் நிதி உதவி வழங்குவதற்கும் முன்வந்துள்ளது.

2038 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டு சங்கத்திடம் போட்டியை நடத்துவதற்கான வேட்புமனு சமர்ப்பிப்பது மற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழுவை அமைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

 விளையாட்டுத் துறை அமைச்சர் வயோலா அம்ஹெர்ட் 2026 ஜூன் இறுதிக்குள் ஒரு திட்டமிடல் முடிவை எடுக்க வேண்டும், என்று கூறினார்.