Tamil Swiss News

சைக்கிள் பந்தய வீராங்கனை மியூரியல் படுகாயம் - போட்டிகளை தொடர்வது குறித்து ஆலோசனை

சைக்கிள் பந்தய வீராங்கனை மியூரியல் படுகாயம் - போட்டிகளை தொடர்வது குறித்து ஆலோசனை

சுவிட்சர்லாந்தில், இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை ஒருவர் விபத்தொன்றில் படுகாயமடைந்துள்ளதால், போட்டிகளை எப்படி தொடர்வது என்பது குறித்து போட்டி அமைப்பாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

வளர்ந்துவரும் சைக்கிள் பந்தய வீராங்கனையான மியூரியல் (Muriel Furrer, 18), சூரிச்சில் சைக்கிள் பந்தயம் ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் விபத்தொன்றை சந்தித்துள்ளார்.

அந்த இடம் ஈரமாக இருந்துள்ளதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. என்றாலும், என்ன நடந்தது என்பதைக் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தலையில் பலத்த காயமடைந்த மியூரியல் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமான விளையாட்டு வீராங்கனையான மியூரியல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், போட்டி அமைப்பாளர்கள் விளையாட்டுப் போட்டிகளை எப்படி தொடர்வது என்பது குறித்து ஆலோசித்துவருகிறார்கள்.