சுவிட்சர்லாந்தில் பல மாகாணங்களில் கடுமையான மழை மற்றும் திடீர் பனிப்பொழிவு

சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டு தினங்களாக குளிருடன் கூடிய காலநிலை நிலவ ஆரம்பித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு தொடக்கம் மலைப்பிரதேசங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
இந்த திடீர் பனிப்பொழிவால் பல பாதைகள் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளதாக TCS தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2000 மீற்றர் உயரமான இடங்களில் 40 செ.மீற்றர் வரை இந்த பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
நீங்கள் 1500 மீட்டருக்கு மேல் உயரத்தில் வாகனம் ஓட்ட விரும்பினால் குளிர்கால டயர்களை மாற்றுவது சிறந்தது எனவும் TCS அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்று வெள்ளிக்கிழமை பல மாகாணங்களில் கடுமையான மழை பெய்துள்ளதுடன் ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.