போனில் தன்னிடம் பேசிய மர்ம நபரிடம் 150,000 பிராங்குககைள ஏமாந்த பெண்!

போனில் தன்னிடம் பேசிய மர்ம நபர் பொலிஸ் என நம்பி அவரிடம் சுவிஸ் பெண்ணொருவர் 150,000 பிராங்குகள் ஏமாந்துள்ளார்.
நாட்டின் பெர்ன் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு 117 என்ற சுவிஸ் அவசர பொலிஸ் நம்பரிலிருந்து போன் வந்துள்ளது.
போனில் பேசிய நபர் தன்னை புலன் விசாரணை அதிகாரி என கூறினார். பின்னர் சில கொள்ளை சம்பவங்கள் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் உங்களின் வங்கி கணக்கு விபரங்களையும் சில கொள்ளையர்கள் குறித்து வைத்துள்ளனர்.
உங்களிடம் உள்ள பணத்தை எங்களிடம் கொடுத்தால் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் உங்களிடமே திருப்பி தந்து விடுவோம் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண், பொலிஸ் என தான் நம்பிய நபரிடம் 150,000 பிராங்குகளை கொடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து தான் ஏமாற்றப்பட்டது பெண்ணுக்கு தெரியவர இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் கூறுகையில், 117 என்பது மக்கள், பொலிஸை உதவிக்கு அழைக்கும் நம்பராகும். அதிலிருந்து நாங்கள் போன் செய்ய மாட்டோம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இது போல பொலிஸ் என பொய்யாக கூறி போன் வந்தால் அவர்களிடம் தங்களின் தனிப்பட்ட எந்தவொரு தகவல்களையும் மக்கள் தரக்கூடாது. இந்த சம்பவத்தில் மோசடி செய்தவர்களை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.