சுவிஸ் மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிப்பு
சுவிட்சர்லாந்து மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் சுமார் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களினால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 2123 குடுமு;பங்களிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வாழ் குடும்பங்களில் பலரினால் சேமிப்பு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.