சுவிட்சர்லாந்தில் தொழில் வாய்ப்பு அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் முதல் காலாண்டு பகுதியில் தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் தொழில் வாய்ப்புக்கள் 1.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில் ஆண்களை விடவும் பெண்கள் கூடுதல் எண்ணிக்கையில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது பெண்கள் மத்தியில் 2 வீத தொழில் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆண்கள் மத்தியில் 0.9 வீத தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் முதல் காலாண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை 4.3 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.