சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் இருந்த அளவினை விடவும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விமான நிலையத்தில் போக்குவரத்து செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 90 ஆயிரம் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூரிச் விமான நிலையத்தை 85 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நத்தார் பண்டிகை காலத்தில் டிசம்பர் மாத 22ம், 23ஆம் திகதிகள் அதிக அளவு பயண நெரிசல் காணப்படும் நாட்களாக அடையாளப்படுத்தப்படுகின்றது.