சுவிட்சர்லாந்தில் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு

சுவிட்சர்லாந்தில் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்கெவ் கான்டனில் இந்த ஆண்டு 1400 கார்களை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் குறித்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது.
ஏதிலி அந்தஸ்து கோரிக்கையாளர்கள் அதிக அளவில் இவ்வாறான கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் மட்டுமன்றி வீடுகள் குடியிருப்புகள் என்பனவற்றிலும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.