Tamil Swiss News

வாகன நெரிசல் காரணமாக A1 வீதியை விஸ்தரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி

வாகன நெரிசல் காரணமாக A1 வீதியை விஸ்தரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி

சுவிட்சர்லாந்தின் மிக நீண்ட வீதியை விஸ்தரிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். சுற்றுலாந்தின் A1 வீதி இவ்வாறு விஸ்தரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. A1 வீதியின் மொத்த நீளம் 410 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீதியின் அகலம் குறைவாக காணப்படுவதனால் வாகன நெரிசல் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு A1 வீதியை விஸ்தரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சில முக்கிய பகுதிகளில் A1 வீதியின் தடங்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.