Tamil Swiss News

அமெரிக்க டாலருக்கு எதிரான சுவிஸ் ஃப்ராங்கின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான சுவிஸ் ஃப்ராங்கின் பெறுமதி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் நாணயம் சுவிஸ் ஃப்ராங்கின் பெறுமதி அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான அதிகூடிய தொகை தற்பொழுது பதிவாகியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான ஸ்விஸ் ஃப்ராங்கின் பெறுமதி இவ்வாறு அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான சுவிஸ் ஃபிராங்கின் பெறுமதி 0.851என பதிவாகியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பதிவான அதி உச்சத் தொகையாக இந்தத் தொகை கருதப்படுகிறது.

மேலும் யூரோவிற்கு நிகரான பிராங்கின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.

ஒரு யூரோவிற்கு எதிரான சுவிஸ் பிராங்க்கின் பெறுமதி 0.94112 பதிவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பணவீக்க வீதம் நாட்டின் மத்திய வங்கியின் இலக்கின் அடிப்படையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி நாட்டின் பண வீக்க வீதத்தை இரண்டு வீதத்திற்கு குறைவாக பேணும் இலக்கினை கொண்டுள்ளது.