Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரில் இரசாயனம்?

சுவிட்சர்லாந்தில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரில் இரசாயனம்?

சுவிட்சர்லாந்தில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் அரைவாசிக்கும் மேற்பட்ட நீரில் இரசானங்கள் உள்ளடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

PFAS என்ற இந்த வகை இரசாயனங்களினால் மனித உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட மாதிரிகளில் இந்த இரசயானம் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இந்த விடயம் தொடர்பில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாம் பருகும் நீரில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் இதனால் அச்சமடையத் தேவையில்லை எனவும் ஜெனீவாவின் கான்டன் இரசாயனவியலாளர் பெற்றிக் எட்டர் தெரிவித்துள்ளார்.

குடிநீர் சிறந்த முறையில் கண்காணிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.