Tamil Swiss News

குழப்பம் விளைவித்த பெண் பயணி ஒருவரினால் சுவிட்சர்லாந்தில் விமானப் பயணம் ரத்து!

குழப்பம் விளைவித்த பெண் பயணி ஒருவரினால் சுவிட்சர்லாந்தில் விமானப் பயணம் ரத்து!

பெண் பயணி ஒருவரினால் சுவிட்சர்லாந்தில் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெல்கிரேட்டுக்கு பயணம் செய்யவிருந்த விமானமே இவ்வாறு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான சேவைக்கு சொந்தமான LX1418 என்ற விமானமே இவ்வாறு பயணத்தை ரத்து செய்துள்ளது.

சூரிச்சிலிருந்து பெல்கிரேடிற்கு பயணம் செய்யவிருந்த விமானத்தில் பயணி ஒருவர் குழப்பம் விளைவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

பெண் பயணி ஒருவர் விமானத்தில் அதி மது போதையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பெண், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானத்தில் 146 பயணிகள் பயணம் செய்யவிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.