Tamil Swiss News

ரஸ்ய சொத்துக்கள் சுவிட்சர்லாந்தில் முடக்கப்பட்டுள்ளது!

ரஸ்ய சொத்துக்கள் சுவிட்சர்லாந்தில் முடக்கப்பட்டுள்ளது!

7.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான ரஸ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மீதான தாக்குதல்களை கண்டித்து இவ்வாறு சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் அடிப்படையில் இவ்வாறு சொத்து முடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஸ்யாவின் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சொத்து முடக்கம் தொடர்பிலான தொகை மாறுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.