Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக சூரிச் விமான நிலையத்தின் சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முனிச், லண்டன், மிலான், பிராங்புட், கோப்பன்கென் போன்ற நகரங்களுக்கான விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணிகள் நிலைமைகளை அறிந்து கொண்டு பயணங்களை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடும் பனிப்பொழிவு காரணமாக குராபன்டன் கான்டனில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.