பாலஸ்தீன விடையத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

பாலஸ்தீன விடையத்தில், சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகள் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு சுவிட்சர்லாந்து உதவிகள் வழங்குவதனை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புகளை துண்டிப்பது பாலஸ்தீன சிவில் சமூகத்தில் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டி உள்ளது.
என்ன காரணத்தினால் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நாட்டின் வெளியுறவு கொள்கை தொடர்பிலான நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதாக சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டி உள்ளது.