சுவிட்சர்லாந்து பசுமை கட்சியின் தலைவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

சுவிட்சர்லாந்து பசுமை கட்சியின் தலைவர் பல்தாஸர் கிலாட்டி (Balthasar Glättli ) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
சூரிச்சை மையமாகக் கொண்ட அரசியல்வாதியான கிலாட்டி தலைமை பதவிக்காக மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சமஸ்டி தேர்தலில் பசுமைக் கட்சி தோல்வியை தழுவியது.
இவ்வாறான ஒரு பின்னணியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பசுமைக் கட்சி தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வியை தாம் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் புதிய ஆரம்பம் ஒன்றுக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் பதவி விலகுவதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்