சுவிட்சர்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு மில்லியன் யூரோ பெறுமதி கஞ்சா!
சுவிட்சர்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 200KG கஞ்சா போதை பொருள் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளது.
53 வயதான போலந்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கஞ்சா போதை பொருளை கடத்திச் சென்றுள்ளார்.
இந்த கஞ்சா போதைப் பொருளின் சந்தை பெறுமதி இரண்டு மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வடகிழக்கு இத்தாலி பகுதியில் கஞ்சா போதை பொருளை கடத்திச் சென்ற வேன் வண்டியொன்றை அந்நாட்டு இத்தாலிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை இத்தாலி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட போதை பொருள் செக் குடியரசுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இத்தாலிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.