Tamil Swiss News

சுவிஸ் லுசேர்ன் போலீசார் விடுத்த எச்சரிக்கை தகவல்.!! மக்களே அவதானம்.!

சுவிஸ் லுசேர்ன் போலீசார் விடுத்த எச்சரிக்கை தகவல்.!! மக்களே அவதானம்.!

அண்மைக்காலமாக லுசேர்ன் மாகாணத்தில் அதிகளவான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. அந்த வகையில் லுசேர்ன் போலீசார் இன்று ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுள்ளார்கள். அது பற்றி மேலும் தெரியவருகையில்.

லுசேர்ன் மாகாணத்தில் போலீசார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றினை வழங்கி இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக லுசேர்ன் போலீசாருக்கு தொலைபேசி மோசடி தொடர்பாக 50 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த 50 புகார்களும் தொலைபேசி மோசடி தொடர்பானவை என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

அவற்றில் மூன்று வழக்குகளில் மோசடிக்காரர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்த போலீசார், இவ்வாறான தொலைபேசி அழைப்பு மோசடி தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். கடந்த 10 நாட்களில் லுசேர்ன் காவல்துறைக்கு தொலைபேசி மோசடி முயற்சிகள் குறித்து புகார்கள் எழுந்து வந்திருக்கிறது.

இவ்வாறான “அதிர்ச்சி அழைப்புகள்” மூலம் மோசடி செய்பவர்கள் அவசர சூழ்நிலையில் இருப்பது போல் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் . வீட்டில் தனியாக இருப்பவர்களுக்கு அவசர தொலைபேசி அழைப்பு விடுத்து உங்களுக்கு நெருக்கமானவர் ஒருவர் கடுமையான விபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர்களை மீண்டும் விடுவிக்க டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் அவர்கள் போலீஸ் அதிகாரிகளாகவோ அல்லது வழக்கறிஞர்களாகவோ தொலைபேசி வழியாக நடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தொலைபேசியின் பின்னணியில் பெண்களினுடைய சினுங்கல்கள், அழுகைகளை காட்டி மோசடி செய்பவர்கள் வேண்டுமென்றே அதிர்ச்சியான ஒரு தருணத்தை உருவாக்கி தொலைபேசியில் பேசுபவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளாக்கி இவ்வாறான மோசடியில் சிக்கவைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் உங்களுடைய உறவினர் அல்லது நெருக்கமானவர் பலத்த விபத்தில் சிக்கி இருக்கிறார், அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் இதற்காக நீங்கள் குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் கேட்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறான அழைப்புகளால் லுசேர்ன் மாகாண முலுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 50 வழக்குகளில் 3 வழக்குகள் மோசடி செய்பவர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஸ்விஸ் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.


இது குறித்து லுசேர்ன் காவல்துறை மக்களை எச்சரித்து இருக்கிறது:


இவ்வாறாக அழைப்புகள் அல்லது விபத்து நடந்ததாக கூறப்படும் கதையைச் சொன்னால் சந்தேகப்படுங்கள் எனவும் உடனடியாக அவ்வாறான அழைப்புகளை துண்டித்து விடவும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்புக்குரியவர்களே தொடர்பு கொண்டு அவர்கள் நன்றாக இருக்கிறார்களா அல்லது சொல்லப்படும் கதை உண்மையா பொய்யா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நிதி நிலைமைகள் வங்கி கணக்குகள் அல்லது மதிப்பு மிக்க பொருட்கள் பற்றிய தகவல்களை யாருக்கும் தொலைபேசி வழியாக வழங்காதீர்கள்

உங்களுக்கு தெரியாத நபருக்கு ஒருபோதும் பணத்தையோ மதிப்புமிக்க பொருட்களையோ கொடுக்க வேண்டாம்.

தொலைபேசியில் தெரியாதவர்கள் யாராவது உங்களை அழைத்தால் அழைப்பை துண்டித்து விடுங்கள்.

இவை அனைத்தும் உங்களுடைய பாதுகாப்பிற்காக சொல்லப்படுகிறது. தனிப்பட்ட சூழலில் இருப்பவர்கள் தொலைபேசி மோசடி விடயங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் உங்களுடைய உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்,

இவ்வாறு தொலைபேசி மோசடி செய்பவர்களை அம்பலப்படுத்த போலீசாருக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 117 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து விவரங்களை தெரிவிங்கள் எனவும் போலீசார் குறிப்பிட்டுள்ளார்கள்.