நெடுஞ்சாலை ஸ்டிக்கர் இன்றி பயணித்தால் 200 பிராங்க் அபராதம்

சுவிட்சர்லாந்தில் நெடுஞ்சாலை ஸ்டிக்கர் ( Highway Vignette) எனப்படும் கார் ஸ்டிக்கர்கள் இன்றி வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணித்தால் 200 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான இந்த ஸ்டிக்கர்கள் இன்றி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தபால் நிலையங்கள், எல்லைப் பகுதிகள் என்பனவற்றில் இந்த ஸ்டிக்கர்களை கொள்வனவு செய்ய முடியும்.
கொள்வனவு செய்யும் வாகன ஸ்டிக்கர்கள் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.