வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பெரும் சவாலாக வட்டி வீதம் பாரியளவில் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் அடகுக் கடன் வட்டி வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வட்டி வீதம் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.
ஐந்து ஆண்டு நிலையான அடகுக் கடன் தொகைக்காக 2.54 வீதமும், பத்தாண்டு ஆண்டு நிலையான அடகுக் கடன் தொகைக்கு 2.76 வீதமும் அறவீடு செய்யப்படுகின்றது.
எனினும், கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டு வட்டி வீதம் 1.01 வீதமாகவும் பத்து ஆண்டு வட்டி வீதம் 1.26 வீதமாகவும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி வீத அதிகரிப்பானது வீடுகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கும் பெரும் சவாலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.