Tamil Swiss News

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

1. Jugfraujoch:

Amazing Race என்ற நிகழ்ச்சியில் தான் இந்த இடத்தை குறித்து அறிந்து கொண்டேன். ஐரோப்பாவின் மிக உயரத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் கொண்ட இடம், கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 3450 மீ. Interlaken நகரில் இருந்து Latterbrunnen வரை மகிழுந்தில் சென்று அதன் பிறகு மலை ரயிலில் சென்றோம். போகும் வழி முழுக்க அவ்வளவு ரம்மியமான இடங்கள்.



2. Matterhorn:


சுவிற்சர்லாந்தின் மிக உயர்ந்த சிகரம். Tasch வரை மகிழுந்து செல்ல அனுமதி, அதன் பிறகு Zermatt என்னும் இடத்திற்கு ரயிலில் செல்ல வேண்டும். Matterhorn செல்ல கேபிள் கார் பயன்படுத்த வேண்டும். Zermatt கிராமம் மிகவும் கவர்ந்தது. Zermatt-இல் இருந்து Matterhorn வரை மலை ஏற வேண்டும் என்ற பேராசையும் உண்டு(13.3 km).



3. Rhine நீர்வீழ்ச்சி:


Zurich நகரத்தில் இருந்து ஒரு மணி நேரம் ரயில் பயணம் செய்தால் இந்த நீர்வீழ்ச்சி சென்றடையலாம். அங்கே சென்றது குற்றாலம் ஞாபகம் வந்து விட்டது. ஐரோப்பாவில் அதிக தண்ணீர் displace செய்யும் நீர்வீழ்ச்சி இது தான். உயரம் குறைவு தான் ஆனால் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்ந்தோடும்.



4. Zurich மற்றும் Uetliberg :


சுவிற்சர்லாந்தில் பிடித்த நகரம் zurich தான். அங்கே ஒரு தாவரவியல் பூங்கா இருக்கிறது, நிறைய தெரியாத தாவர Species எல்லாம் வைத்து பாதுகாக்கிறார்கள். அங்கே இருந்த Tropical Green house மிகவும் பிடித்திருந்தது.



சிறிது தூரத்தில் Uetilberg(ஜெர்மன் மொழியில் Berg என்றால் மலை என்று பொருள்) என்னும் சிறிய மலை இருக்கிறது. அங்கிருந்து Zurich நகரத்தின் காட்சி கொள்ளை அழகு.



5. Interlaken :


இந்த நகரை சாகசக்காரர்களின் சொர்க்கம் எனலாம், Paragliding, Bungee Jumping,Kayaking, sky diving என சொல்லி கொண்டே போகலாம். ஆல்ப்ஸ் மலை தொடர்களின் இடையில் பாய்ந்தோடும் Thursee மற்றும் Breinzersee (see என்றால் ஜெர்மன் மொழியில் ஏரி) ஏரிகள் மரகத பச்சை நிறத்தில் அழகான காட்சி.