Tamil Swiss News

சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிற்கு பெருந்தொகை மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி!

சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிற்கு பெருந்தொகை மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி!

கடந்த 30 ஆண்டுகளில் கடந்த ஆண்டில் பாரியளவு மருந்துப் பொருட்களை சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

ரஸ்யாவிற்கு எதிரான தடை செய்யப்பட்ட பொருட்களின் மருந்துப் பொருட்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோச்சே, நொவிராட்ஸ் மற்றும் ஏனைய மருந்துப் பொருள் நிறுவனங்கள் ரஸ்யாவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்து 2.1 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை வருமானமாக ஈட்டியுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டில் சுவிஸ் மருந்துப் பொருள் நிறுவனங்கள் 1.5 பில்லியன் சுவிஸ் பிராங் பெறுமதியான மருந்துப் பொருட்களை ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டுக்கும் கடந்த 2022ம் ஆண்டுக்கும் இடையில் ரஸ்யாவிற்கான சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் விற்பனை 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

விற்பனை தொகை அதிகரிக்கப்பட்டாலும் ஏற்றுமதி அளவு பெரிதாக அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.