Tamil Swiss News

வட்டி வீதங்களை அதிகரிக்க உள்ள சுவிட்சர்லாந்து வங்கி!

வட்டி வீதங்களை அதிகரிக்க உள்ள சுவிட்சர்லாந்து வங்கி!

சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சுவிஸ் மத்திய வங்கி மூன்று சந்தர்ப்பங்களில் வட்டி வீதங்களை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட்டி வீதங்கள் உயர்த்தப்பட வேண்டியதுமிகவும் இன்றியமையாதது என மத்திய வங்கியின் ஆளுனர் தோமஸ் ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு வீதம் உயர்த்தப்படும் என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை.

வட்டி வீதங்கள் மேலும் 0.5 வீதமாக உயர்வடையும் எனவும் அதன்படி 1.5 வீதமாக உயர்வடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வட்டி வீத அதிகரிப்பானது அடகுக் கடன் வட்டி வீதங்களை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.