Tamil Swiss News

சீனா மீது தடை: சுவிட்சர்லாந்தின் நிலை

சீனா மீது தடை: சுவிட்சர்லாந்தின் நிலை

சீனா மீது தடைகளை விதிக்க சுவிட்சர்லாந்து தயக்கம் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் வாழ்ந்து வரும் உய்குர் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் மீது பிரயோகித்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு சீனா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்திருந்தது.

எனினும், சுவிட்சர்லாந்து இதுவரையில் தடைகளை விதிப்பதற்கான எவ்வித முனைப்புக்களை எடுக்கவில்லை பிரபல பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பிலான தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா மீது அழுத்தங்களை பிரயோகிப்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் சுவிஸ் அரசாங்கம் அதிகாரபூர்வ பேச்சு நடத்திய போதிலும் இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.