Tamil Swiss News

தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்

தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்

கோவிட்19 தடுப்பூசிகள் அவற்றின் இலக்குகளை அடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்து சமஷ்டி தடுப்பூசி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் தொடர்பில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 70 வீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோவிட் தடுப்பூசியையேனும் ஏற்றிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தவும், நோய்த் தாக்கத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தவும் தடுப்பூசிகள் சிறந்த முறையில் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து இதுவரையில் 17 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகத்துள்ளதுடன், கையிருப்பில் 13.5 மில்லியன் தடுப்பூசிகள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.