Tamil Swiss News

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பண வீழ்ச்சி

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பண வீழ்ச்சி

சுவிஸ் வங்கிகளில் பல பிரமுகர்கள் தங்களது கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பார்கள் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகநாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் உட்பட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பலரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது என்னமோ உண்மைதான்.

ஆனால் முன்பு போல இப்போதெல்லாம் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைக்க முடியாது என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக யெர்மன் நாட்டை சேர்ந்த பலர் தங்களது கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்ததாகவும் தற்போது அது முடியாது எனவும் சொல்லப்படுகிறது.

சரி அவர்கள் எப்படி தங்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தார்கள். இதற்கு அவர்கள் கையாண்ட யுக்தி என்ன. தற்போது ஏன் முடியாமல் இருக்கிறது போன்ற சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை 2018இல் மூன்றில் ஒன்றாக குறைந்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கவேயில்லை என்றும் சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் கூறுகின்றன.

செல்வந்தர்கள் கருப்புப்பணத்தை பதுக்கி வைக்கும் பாதுகாப்பான இடமாக முன்பு சுவிஸ் வங்கிகள் இருந்தன.

அதாவது, ஜேர்மானியர்கள் கணக்கில் வராத தங்கள் கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பார்களாம். அது தொடர்பாக சுவிட்சர்லாந்துக்கு வரும் ஜேர்மானியர்கள், சுற்றுலா வருவதுபோல வந்து தங்கள் நிதி ஆலோசகரை சந்தித்து விவரங்களை அறிந்துகொண்டு, சில நாட்கள் சுவிட்சர்லாந்தில் தங்கிவிட்டு பிரகு ஜேர்மனிக்குத் திரும்பிவிடுவார்கள் என்கிறார் முன்னாள் ஜேர்மன் வரி ஆய்வாளர் ஒருவர்.


நிலைமை இப்போது அப்படியில்லை…

2018ஆம் ஆண்டு, பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புடனான ஒப்பந்தம் ஒன்றைத் தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் இரகசியமாக கருப்புப்பணத்தை பதுக்கமுடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஆகவே, இனி கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கமுடியாது என்பதால், ஜேர்மானியர்கள் 2018க்குப் பிறகு சுவிட்சர்லாந்துக்கு வருவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள்!


via-Swisstamil24