Tamil Swiss News

Vaud மாநிலத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும்: இடதுசாரி தரப்பு கோரிக்கை

Vaud மாநிலத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும்: இடதுசாரி தரப்பு கோரிக்கை

சுவிட்சர்லாந்தின் Vaud மாநிலத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இடதுசாரி தரப்புக்களும், தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

மணித்தியாலம் ஒன்றுக்கான குறைந்தபட்ச சம்பளம் 23 சுவிஸ் பிராங்குகளாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு பொது வாக்கெடுப்பு நடாத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மணித்தியால சம்பளம் நிர்ணயிக்கப்பட்டால் அது ஜெனீவா மாநிலத்திக்கு நிகரான தொகையாக அமையப் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் அதி கூடிய மணித்தியால சம்பளம் வழங்கப்படும் இடமாக ஜெனீவா பொதுவாக அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.