50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபம்: ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்தில் குறிப்பாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவதாக உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக அநேகமான நாடுகளில் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதுடன் வயது முதிர்ந்தவகள் தவிர்க்கவோ அல்லது காத்திருக்க நேரிடுகின்றது.
எனினும் சுவிட்சர்லாந்தில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Von Rundstedt என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2020ம் ஆண்டில் 50 வயதுக்கும் மேற்பட்ட ஒருவர் வேலை தேடுவதற்காக 8 மாதங்கள் செலவிட்டால் கடந்த 2022ம் ஆண்டில் அந்த காத்திருப்பு காலம் 6 மாதங்களாக குறைவடைந்துள்ளது.