Tamil Swiss News

வெளிநாட்டு பணியாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் அவர்கள் வரியை செலுத்த வேண்டும்!

வெளிநாட்டு பணியாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் அவர்கள் வரியை செலுத்த வேண்டும்!

சுவிட்சர்லாந்தின் தொழில் வழங்குனர், தங்களது வெளிநாட்டு பணியாளர்களுக்காக வரி செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பிரஜைகள் சுவிட்சர்லாந்தில் பணியாற்றுவதனை விரும்பாத தரப்பினர், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்திற்குள் ஒருவரை பணிக்கு அமர்த்தாது வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் வெளிநாட்டவர் வரியை செலுத்த வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதனை கட்டுப்படுத்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர நடமாட்டம் குறித்து சுவிட்சர்லாந்து உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள காரணத்தினால் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.