Tamil Swiss News

உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாக Luzern தெரிவு

உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாக Luzern தெரிவு

சுவிட்சர்லாந்தின் வாவுட் கான்டனின் தலைநகரான லோசார்னுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாக லோசார்ன் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக அழகான 52 நகரங்களின் பட்டியலில் லோசார்ன் நகரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா குளம், கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் கலைத்தோற்றம் என்பனவற்றினால் இவ்வாறு உலகின் மிக அழகிய நகரங்களின் வரிசையில் லாவுசார்ன் இடம் பிடித்துக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே சுவிட்சர்லாந்து நகரம் லோசார்ன் என்பது குறிப்பிடத்தக்கது.